சென்னையில் உள்ள பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா – அச்சத்தில் பெண்கள்


சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குள்ள குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்த சஞ்சீவி என்பவர் அதனை பெண்கள் விடுதியாக நடத்தி வந்த நிலையில் ஐ.டி. துறையில் பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த விடுதியில் தங்கியுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த அறைகளில் அடிக்கடி சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் அங்கு தங்கி இருந்த பெண்களுக்கு தங்கள் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து அதை கண்டுபிடிப்பதற்காக தங்களுடைய ஸ்மார்ட்ஃபோனில் ‘ஹிடன் கேமரா டிடக்டர்’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்தனர். பின் அந்த செயலியை பயன்படுத்தி அவர்களுடைய அறைகளை சோதனை செய்த போது அங்கு ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது தெரிந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தங்களுக்கே தெரியாமல் தங்களின் அந்தரங்கம் படம்படிக்கப்பட்டு வருவதால் அச்சமடைந்த பெண்கள் இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரித்த போது பெண்களின் படுக்கையறை, குளியல் அறைகளில் உள்ள ஸ்விட்ச் போர்ட், உடைகளை வைக்கும் ஹேங்கர், மின்விளக்குகள் உள்ளிட்ட எதிர்பாராத இடங்களில் மிகச்சிறிய அளவிளான கண்களுக்கு தெரியாத அளவிளான ரகசிய கேமராக்கள் பொறுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து விடுதியின் உரிமையாளர் சஞ்சீவியை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து 16 கைப்பேசிகள், ரகசிய கேமராக்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், போலி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த ரகசிய கேமராக்கள் எப்போது பொறுத்தப்பட்டதன, கைது செய்யப்பட்ட சஞ்சீவியின் பிண்ணனியில் யார் செயல்படுகிறார்கள், விடுதியில் தங்கியிருக்கும் பெண்களின் அந்தரங்கத்தை படம்பிடித்து ஆபாச இணையதளங்களில் அவை பதிவேற்றப்படுகிறதா போன்ற கேள்விகளுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையை பொறுத்தவரை வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து தங்கி வேலை பார்த்து வரும் பெண்கள் ஏராளம். அவர்களின் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS