சில்க்’ ஸ்மிதாவின் பிறந்தநாள் : பலதரப்பட்ட ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட ‘சில்க்’ ஸ்மிதா மரணத்தை நோக்கி சென்றது ஏன்?

644 Views
By bhuwaneshwaran-g | December 2, 2019

1980-களின் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து பலதரப்பட்ட ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட ஒரு கவர்ச்சி நடிகை என்றால் அது ‘சில்க்’ ஸ்மிதா தான். இன்று அவர் இவ்வுலகில் இல்லையென்றாலும் அவருடைய நினைவுகள் மட்டும் நம்முடன் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ‘சில்க்’ ஸ்மிதா என்றால் வசீகரிக்கும் கண்கள் தான் நம் நினைவுக்கு முதலில் வரும். ஆனால் அவரின் வாழ்வில் அவர் கடந்து வந்த துயரங்கள் ஏராளம். தன்னுடன் நடிக்கும் கதாநாயகர்களுக்கு இணையான சம்பளம் வாங்கிய ‘சில்க்’ ஸ்மிதா மரணத்தை நோக்கி சென்றது ஏனென்று இதுவரை நம்மில் யாருக்கும் தெரியாது. அவருடைய மரணத்தில் உள்ள அந்த மர்மம் இன்று வரை நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு என்ற கிராமத்தில் தமிழ் மொழியை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் தான் ‘சில்க்’ ஸ்மிதா. அவருடைய இயற்பெயர் விஜயலட்சுமி. ‘சில்க்’ ஸ்மிதாவின் இளமைப்பருவம் அத்தனை மகிழ்ச்சியானதாக அவருக்கு அமையவில்லை.

காரணம் வறுமை அவருடைய குடும்பத்தை ஆட்டிப்படைத்தது. நான்காம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய ‘சில்க்’ ஸ்மிதாவுக்கு சினிமாவில் பெரியளவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்துள்ளது. ஆனால் குடும்பச் சூழலால் சிறு வயதிலேயே அவருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. கணவர் மற்றும் மாமியாரின் தொந்தரவோடு வறுமையும் அவரை ஆட்டிப்படைத்தது. இதையடுத்து தன் வறுமையை போக்கிக் கொண்டு சினிமாவில் சாதிப்பதற்காக சென்னைக்கு வந்த ‘சில்க்’ ஸ்மிதா தன் உறவினர்களின் வீட்டில் தங்கி வேலைப் பார்த்து கொண்டே சினிமா வாய்ப்பையும் தேடி வந்து இருக்கிறார். அப்போது 1980-ல் நடிகர் வினு சக்கரவர்த்தியின் உதவியால் ‘வண்டிச்சக்கரம்’ என்ற திரைப்படத்தில் ‘சில்க்’ என்ற கதாபாத்திரத்தில் ‘சில்க்’ ஸ்மிதாவாக அறிமுகமானார்.

‘சில்க்’ ஸ்மிதாவுக்கு நடிகைகள் சுஜாதா, சரிதா, போல் நல்ல கதாபாத்திரம் கொண்ட கதைகளில் நடிக்க ஆசை. ஆனால் முதல் படமே சாராயம் விற்கும் பெண்ணாக கவர்ச்சி வேடமே அவருக்கு கிடைத்தது. இருப்பினும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாக நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். அதன் பின் தமிழ் சினிமாவில் அவருக்கு ஏறுமுகம் தான். கவர்ச்சி வேடம் ஏற்று நடித்தாலும் சொக்க வைக்கும் கண்களால் இந்திய சினிமாவையே புரட்டிப்போட்டார் ஸ்மிதா. 1980-களில் ‘சில்க்’ ஸ்மிதா’ இடம் பெறாத திரைப்படங்களே இல்லை எனக் கூறும் அளவிற்கு பட வாய்ப்புகள் அவருக்கு வரிசைக் கட்டி நின்றது.

ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் கூட தங்களின் படங்களில் ‘சில்க்’ ஸ்மிதாவுக்கு கேரக்டர் இருக்கிறதா என கேட்கும் அளவிற்கு பிரபலமான நடிகையாக வலம் வந்தார் ‘சில்க்’ ஸ்மிதா. முன்னணி கதாநாயகர்கள் அவரது கால்ஷீட்டிற்கு காத்திருந்தனர். தயாரிப்பாளர்கள் கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்யும் முன் ஸ்மிதாவின் கால்ஷீட் கிடைக்குமா என்று பார்த்துவிட்டு தான் தயாரிப்பு பணிகளை தொடங்குவார்கள். நாயகர்களுக்காக 50 சதவிகிதம் வியாபாரம் நடந்த நிலையில் மீதமுள்ள 50 சதவிகித வியாபாரம் ‘சில்க்’ ஸ்மிதாவின் கவர்ச்சிக்கு நடந்தது. புகழின் உச்சிக்கு சென்ற ‘சில்க்’ ஸ்மிதாவுக்கு பணமும் குவியத் தொடங்கியது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி “யார் இந்த சில்க்” என கேட்கும் அளவுக்கு ‘சில்க்’ ஸ்மிதாவின் தாக்கம் இந்திய திரையுலகில் இருந்து வந்தது.

பல நடிகர்களுடன் அவர் சேர்ந்து நடித்தாலும் திரையுலகில் தன்னுடைய நட்பு வட்டத்தை ‘சில்க்’ ஸ்மிதா சுறுக்கியே வைத்திருந்தார். காரணம் தான் ஒரு கவர்ச்சி நடிகை என்பதால் பிற நடிகர்கள் தன்னை பாலியல் ரீதியாக அனுகும் நிலை ஏற்பட வேண்டாம் என அவர் நினைத்திருந்தார். அதனால் ‘சில்க்’ ஸ்மிதா ஒரு துணிச்சலான தைரியமான பெண்ணாகவும் வலம் வந்தார். எந்த அளவிற்கு அவர் புகழின் உச்சியில் இருந்தாரோ அந்த அளவிற்கு சர்ச்சைகளும் அவரைச் சூழ்ந்திருந்தது. ஒருமுறை பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனரின் திரைப்படத்தில் ‘சில்க்’ ஸ்மிதா நடித்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்பு தளத்துக்கு அந்தத் தயாரிப்பாளர் வந்த போது அவரைக் கண்ட ‘சில்க்’ ஸ்மிதா எழுந்து கொள்ளாமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். அதைப் பற்றி கேட்ட போது “அவரின் படத்தில் கௌரவமான வேடம் கொடுத்தா நடிக்கவைத்திருக்கிறார், நான் அவருக்கு எழுந்து மரியாதையோடு வணக்கம் சொல்ல? என்னால்தான் அவருக்கு லாபம். அவர்தான் எனக்கு வணக்கம் சொல்லணும்… நான் அல்ல’ என்று கூறியிருக்கிறார். தன்னுடைய தன்மானத்தை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் துணிச்சலான பெண்ணாக அவர் இருந்தார்.

இதே போல் ஒருமுறை நடிகர் சிவாஜி கணேசன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த போது அனைவரும் எழுந்து நின்ற நிலையில் ‘சில்க்’ ஸ்மிதா மட்டும் உட்கார்ந்தே இருந்ததால் திமிர் பிடித்தவள் என பலரும் ஸ்மிதாவை கூற “எழுந்து நின்னா, என் குட்டைப் பாவாடை சிவாஜி சாருக்குக் கூச்சத்தையும் சங்கடத்தையும் உண்டாக்கிடும். அதனால்தான் உட்கார்ந்தே இருக்கேன்” எனச் சொல்லி, நடிகர் சிவாஜி கணேசன் அவர்களை நெகிழவைத்தவர் ‘சில்க்’ ஸ்மிதா. என்ன தான் புகழின் உச்சிக்கு சென்றாலும் தன்னை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த நடிகர் வினு சக்கரவர்த்தி மீது தனி மரியாதை வைத்திருந்தார் ‘சில்க்’ ஸ்மிதா. இந்நிலையில் ‘சில்க்’ ஸ்மிதாவைவும் வினு சக்கரவர்த்தியையும் இணைத்து ஊடகங்களில் செய்தி வந்தது. அதற்கு ‘சில்க்’ ஸ்மிதா, வினு சக்கரவர்த்தி தன்னுடைய குருநாதர் என்றும் அவரையும் தன்னையும் பற்றி தவறாக எழுதுவதா என தன் கண்டனத்தை பதிவு செய்தார். அதே போல் வினு சக்கரவர்த்தி ஒரு பேட்டியில் தன்னுடைய அடுத்த பிறவியில் ‘சில்க்’ ஸ்மிதா தனக்கு மகளாக பிறக்க ஆசைப்படுவதாக நெகிழ்ந்து கூறினார்.

‘சில்க்’ ஸ்மிதாவை ரசிகர்கள் கொண்டாடினாலும் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்திலும் அவருக்கு நடிக்க ஆசை இருந்தது. அந்த வகையில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தியது. ‘எஸ்தர்’ என்ற கதாபாத்திரத்தில் கணவனை எதிர்த்து காதல் திருமணம் செய்து வைக்கும் பெண்ணாக ஆணாதிக்கத்தை எதிர்த்து அவர் நடித்திருப்பார். அதே போல் ‘அன்று பெய்த மழையில்’, ‘மூன்றாம் பிறை’ போன்ற திரைப்படங்கள் அவரது நடிப்புக்கு தீனி போட்டது. மேலும் தமிழ் சினிமாவை விட மளையாள சினிமாவையே ‘சில்க்’ ஸ்மிதா அதிகம் நேசித்தார். காரணம் நடிப்பதற்கு வாய்ப்புள்ள நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் மளையாள சினிமாவில் இருந்து அவரை தேடி வந்தது. மளையாளத்தில் ‘சில்க்’ ஸ்மிதா நடித்த ‘இணையே தேடி’ என்ற படம் அவருக்கு மிகவும் நெருக்கமான படமாக அமைந்தது.

கிட்டத்தட்ட 450 படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்ற ‘சில்க்’ ஸ்மிதாவின் சொந்த வாழ்க்கை அவ்வுளவு மகிழ்ச்சியானதாக இல்லை. எல்லா பெண்களை போல் குடும்ப வாழ்க்கையின் மீது அதிக ஆசை வைத்திருந்தார் ‘சில்க்’ ஸ்மிதா. ஆனால் அவருடன் உறவாடிய ஆண்கள் அனைவரும் அவரது உடலை தான் தேடி வந்தனர். உண்மையான அன்புக்காக ஏங்கிய ‘சில்க்’ ஸ்மிதாவுக்கு கடைசியில் அது வெறும் கனவாகவே போனது. தன் வாழ்க்கையில் யாரை சேர்த்துக் கொள்ள வேண்டும், யாரை நம்ப வேண்டும் என்ற குழப்பம் அவரை எப்போதும் சூழ்ந்து கொண்டிருந்ததால் ஒரு வித வெறுமையை நோக்கி பயணித்தார் ‘சில்க்’ ஸ்மிதா. அவரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் குழப்பத்தில் இருந்த நிலையில் தன்னை சுற்றி இருந்தவர்கள் மீதுள்ள சந்தேகம் அவரை இன்னும் தனிமைப்படுத்தியது. இந்நிலையில் 1996-ம் வருடம் தன்னுடைய 35 வயதில் ‘சில்க்’ ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்தது. புகழின் உச்சியில் இருந்தவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என ஒரு தரப்பு கேள்வி எழுப்பியது. மற்றொரு தரப்பு அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை கிளப்பியது. இதையடுத்து இது தற்கொலை என காவல்துறையினர் வழக்கை முடித்தனர். இருப்பினும் ‘சில்க்’ ஸ்மிதாவின் மரணம் தொடர்பான மர்மம் இன்று வரை அகலவில்லை.

சினிமா உலகில் கதாநாயகிகளை விட அதிக சம்பளம் வாங்கி உச்சத்தில் இருந்த ‘சில்க்’ ஸ்மிதாவின் மறைவுக்கு சக நடிகைகள் கண்ணீர் விட்டனர். தன்னுடைய வாழ்க்கை என்னவென்று அறியாமல் ‘சில்க்’ ஸ்மிதா இறந்து விட்டதாக சக நடிகர்கள் வேதனை தெரிவித்தனர். திருமணம் முடித்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு எல்லாப் பெண்களையும் போல் வாழ ஆசைப்பட்ட ‘சில்க்’ ஸ்மிதாவின் முடிவை ரசிகர்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘சில்க்’ ஸ்மிதா மறைந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் இன்று வரை அவரை கொண்டாடி வருகின்றனர். அவர் நடித்த காலக்கட்டத்தில் வந்த பல கவர்ச்சி நடிகைகளுக்கு மத்தியில் தன்னை நிலைநிறுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ‘சில்க்’ ஸ்மிதா. அவர் இவ்வுலகில் இல்லை என்றாலும் அந்த வசீகரிக்கும் கண்கள் அவரை நமக்கு என்றும் நினைவுபடுத்தி கொண்டே இருக்கும்.

WHATS YOUR REACTION?

0
0
0

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

kollywood, awesome spotlight

14 years of Dishyum : 7 facts about this romantic film

By Salesh Dipak | February 3, 2020
Read more

kollywood, awesome spotlight

8 years of Marina : 7 facts about this children film

By Salesh Dipak | February 3, 2020
Read more

kollywood, awesome spotlight

Dhanush’s exciting lineup of films for 2020-21 : Details inside

By Salesh Dipak | February 3, 2020
Read more

Trending

“Burn my son the same way she was burnt ” says the mother of accused in gang rape and murder of Hyderabad Vet

Read more

Finland Prime minster suggests 6 hours working per day and 4 days per week

Read more

Shocking Incident in Hyderabad : Veterinarian was raped and burnt alive while she was returning to home

Read more

Happy Birthday Raashi Khanna : 7 facts about this pretty actress

Read more

Top 10 Worst Movies of 2019

Read more

Top 10 Underrated Films of 2019

Read more

Filmfare Awards South 2019 – List of Winners

Read more

Happy birthday Rana : 7 facts about this pan Indian actor

Read more

சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலையில் திடீர் திருப்பம் : தற்கொலைக்கு உதவி பேராசியர்களே காரணம் என மாணவி கைப்பேசியில் பதிவு

Read more

1 year of 2.0 : 7 facts about this sci-fi film

Read more