தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் ‘ஸ்டார்ட்-அப் பொங்கல் 3.0’ சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது


தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் ஒன்று கூடி கொண்டாடும் ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’ இந்த ஆண்டும் பிரம்மாண்டமாய் சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலையில் நேற்று நடைபெற்றது. தொடக்க நிறுவன நிறுவனர்கள் பலர் இதில் பங்கேற்றனர். நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிக்கான பண்டிகை பொங்கல். விவசாயி தன் நிலத்தின் விளைச்சலுக்கு உதவிய இயற்கை அன்னைக்கும் தங்களுக்காக உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அத்தகைய பொங்கல் பண்டிகைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஒன்று கூடி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதே ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’.

இது தமிழகத்தைச் சார்ந்த தொடக்க நிறுவனர்களை ஒருங்கினைக்கும் திருவிழா. தொடக்க நிறுவனர்கள் ஒருவருக்கொருவர் தங்களை அறிமுகப்படுத்தி கொள்ளவும் தங்களின் தொடர்புகளை விரிவடையச் செய்யவும் நடத்தப்படும் ஒரு நிகழ்வு. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த திருவிழா இந்த வருடமும் நேற்று நடைபெற்றது. ‘ஸ்டார்ட்-அப் பொங்கல் 3.0’ என பெயரிடப்பட்டுள்ள இந்த விழாவில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளான பம்பரம், கோலி, பாண்டி, நொண்டி, கபடி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.

சிலம்பாட்ட நிகழ்ச்சியுடன் தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளான பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் சிறப்பம்சமாக ‘படவா’ கோபி தலைமையில் ‘ஸ்டார்ட்-அப்’ பட்டிமன்றம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ‘நேச்சுரல்ஸ்’ இணை இயக்குனர் குமாரவேல், ‘கேட் சென்டர்’ நிர்வாக இயக்குனர், கரலாடி செல்வம், ஆற்காடு நவாப் ஆசிஃப் அலி, ‘மாபா’ துணை நிறுவனர், லதா பாண்டியராஜன், ‘பேசிக்ஸ்’ நிர்வாக இயக்குனர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பாரம்பரிய முறைப்படி ‘பரிவட்டம்’ கட்டப்பட்டு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘நேச்சுரல்ஸ்’ இணை இயக்குனர் குமாரவேல் “புதிதாக தொழில் துவங்குவோர், வாடிக்கையாளர், பணியாளர், சமுதாயம், பண முதலீடு உள்ளிட்ட 7 கோட்பாடுகளை மனதில் வைத்து தொழில் துவங்க வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும்” என்று பேசினார்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: Awesome Startups

DON'T MISS