தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் ‘ஸ்டார்ட்-அப் பொங்கல் 3.0’


தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் ஒன்று கூடி கொண்டாடும் ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’ இந்த ஆண்டும் பிரம்மாண்டமாய் நடைபெற உள்ளது. தொடக்க நிறுவன நிறுவனர்கள் உடனடியாக பதிவு செய்து இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கலாம்.

நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிக்கான பண்டிகை பொங்கல். விவசாயி தன் நிலத்தின் விளைச்சலுக்கு இயற்கை அன்னைக்கும் தங்களுக்காக உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அத்தகைய பொங்கல் பண்டிகைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஒன்று கூடி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதே ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’.

இது தமிழகத்தைச் சார்ந்த தொடக்க நிறுவனர்களை ஒருங்கினைக்கும் திருவிழா. தொடக்க நிறுவனர்கள் ஒருவருக்கொருவர் தங்களை அறிமுகப்படுத்தி கொள்ளவும் தங்களின் தொடர்புகளை விரிவடையச் செய்யவும் நடத்தப்படும் ஒரு நிகழ்வு. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த திருவிழா இந்த வருடமும் நடைபெற உள்ளது. ‘ஸ்டார்ட்-அப் பொங்கல் 3.0’ என பெயரிடப்பட்டுள்ள இந்த விழாவில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளான பம்பரம், கோலி, பாண்டி, நொண்டி, கபடி ஆகிய போட்டிகள் நடத்தப்படும்.

சிலம்பாட்ட நிகழ்ச்சியுடன் தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளான பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும். மேலும் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் விழாவில் சிறப்பம்சமாக ‘ஸ்டார்ட்-அப்’ பட்டிமன்றம் இணைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது பேசிய நிகழ்ச்சியின் ஒருங்கினைப்பாளர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’ திருவிழாவில் சுமார் 300 தொடக்க நிறுவனர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டும் கூடுதலாக பல புதிய நிறுவனங்களின் நிறுவனர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து கலந்து கொள்வார்கள் என தெரிவித்தனர். ‘ஸ்டார்ட்-அப் பொங்கல் 3.0’ விழாவில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனர்கள் http://www.startuppongal.com/participant/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

‘ஸ்டார்ட்-அப் பொங்கல் 3.0 குறித்த விவரங்கள்:

நடைபெறும் நாள் : ஜனவரி 10, 2019
நடைபெறும் இடம்: எஸ்.ஆர்.எம். கல்லூரி
நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்:
அருள் முருகன்-9843824949
சுரேஷ் ராதாகிருஷ்ணன்-9710931622

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS