வங்கி வேலைக்காக கும்பகோணம் வந்த வடமாநில பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் : வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிமன்றம்

1775 Views
By bhuwaneshwaran-g | January 14, 2020

கும்பகோணத்தில் வடமாநில இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் வழக்கில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுனருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தஞ்சை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவருக்கு கும்பகோணத்தில் உள்ள வங்கி ஒன்றில் வேலை கிடைத்தது. இதற்காக டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த பெண் சென்னையிலிருந்து கும்பகோணத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி இரவு திருச்செந்தூர் விரைவு ரயிலில் கும்பகோணம் வந்தார். ரயில் இரவு 11 மணியளவில் தாமதமாக கும்பகோணம் வந்தடைந்துள்ளது. ரயிலை விட்டு இறங்கிய அந்த பெண் இன்னும் சற்று நேரத்தில் அறைக்கு வந்து விடுவதாக தனது தோழிக்கு கைப்பேசியில் தெரிவித்துள்ளார்.

ரயில் நிலையத்தை விட்டு காமராஜர் சாலைக்கு வந்தவர் ஆட்டோவில் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆட்டோ ஓட்டுனரிடம் தான் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லுமாறு ஆங்கிலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் அந்த பெண்ணை பைபாஸ் சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த பெண் ஆட்டோ ஓட்டுனரிடம் திசை மாறி செல்கிறீர்களா என கேட்டுவிட்டு ஆங்கிலத்தில் ஹெல்ப் ஹெல்ப் என கூச்சலிட்டுள்ளார். இதனால் பயந்து போன ஆட்டோ ஓட்டுநர் அந்தப் பெண்ணை அங்கேயே இறக்கிவிட்டு சென்று விட்டார். இரவு நேரம், ஆள் நடமாட்டம் வேறு இல்லாததால் என்ன செய்வதென்று தவித்த படி தன்னுடைய டிராலி பேக்கை இழுத்துக்கொண்டு செட்டி மண்டபம் பைபாஸ் சாலை வழியாக அந்த பெண் நடந்தார்.

அப்போது அவ்வழியே வந்த இளைஞர் ஒருவரிடம் லிஃப்ட் கேட்க அந்த இளைஞரும் அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார். இளைஞரின் நண்பர் ஒருவரும் பின்னாலேயே வந்தார். பின்னர் அந்த பெண்ணை நாச்சியார் கோயில் பைபாஸ் சாலை அருகே இருட்டான பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவர்கள் தன் நண்பர்கள் இருவரை வரவழைத்துள்ளனர். அவர்களும் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அந்த பெண் என்னை விட்டு விடுங்கள் என கூச்சலிட அந்த இளைஞர்கள் அடித்துக் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். அதன் பிறகு அந்தப் பெண் மயக்க நிலைக்கு சென்றுள்ளார். பின்னர், அந்த இளைஞர்கள் மெயின் ரோட்டிற்கு வந்து ஆட்டோ பிடித்து அந்தப் பெண்ணை ஏற்றியதுடன் அவரை இறக்கி விடுவதற்காக ஒரு இளைஞரும் ஏறிக் கொண்டு சென்று அந்தப் பெண் செல்ல வேண்டிய இடத்தில் இறக்கிவிட்டுள்ளார்.
ஆட்டோவிலிருந்து இறங்கும் போது அந்த இளம் பெண் ஆட்டோவின் பதிவு எண்ணைக் குறித்து வைத்துக்கொண்டார். பின்னர் தன் தோழியிடம் நடந்த சம்பவத்தைக் கூறி கதறியிருக்கிறார். இந்தத் தகவல் வங்கி நிர்வாகத்திற்கும் சென்றது. இதையடுத்து டெல்லியில் உள்ள பெற்றோர்களிடமும் கூறி அவர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் வெளிச்சத்துக்கு வந்த இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வங்கி நிர்வாகம் தரப்பிலும் போலீஸாரிடம் விரைவில் விசாரணை செய்யுமாறும் குற்றவாளிகள் யாரும் தப்பிக்கக்கூடாது எனவும் அழுத்தம் தரப்பட்டது. விசாரணையில் தினேஷ், வசந்த்குமார், புருஷோத்தமன், அன்பரசு மற்றும் இதற்குக் காரணமான ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் அந்த நான்கு இளைஞர்களும் இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

விசாரணையின் போது அந்தப் பெண் “எனக்கு நடந்ததுபோல் இனி எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய தண்டனை ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதுடன் இனி யாரும் இது போன்ற சம்பவங்களைச் செய்வதற்கு அச்சப்பட வேண்டும். எங்கு வந்து வேண்டுமானாலும் சாட்சி சொல்கிறேன்” என ஆதங்கத்துடன் போலீஸாரிடம் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தஞ்சாவூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. போலீஸார் 700 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அரசு தரப்பு சாட்சியாக 33 பேர் விசாரிக்கப்பட்டனர்.

இதையடுத்து இவ்வழக்கு நேற்று (ஜனவரி 13) காலை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்கை விசாரித்து, அரசு தரப்பு சாட்சியங்கள் சந்தேகம் இன்றி நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் 5 பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகளான தினேஷ், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசு ஆகிய நான்கு பேருக்கும் நீதிபதி சாகும் வரை சிறைத் தண்டனை விதித்தார். அத்துடன் அவர்களின் உடல்தான் சிறையிலிருந்து வெளியே வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் இதில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டுக் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதைக் குற்றவாளிகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.

WHATS YOUR REACTION?

1
1
5
4

1 Comment

Join the Conversation

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

News

An American bride asked for money from her invitees to be on the ‘exclusive guest list’.

By Jegan Ravichandran | January 20, 2020
Read more

kollywood, awesome spotlight

7 Pongal release movies of Thala Ajith’s which made an impact in his career

By Salesh Dipak | January 20, 2020
Read more

kollywood, awesome spotlight

9 years of Siruthai : 7 facts about this superhit cop film

By Salesh Dipak | January 20, 2020
Read more

Trending

“Burn my son the same way she was burnt ” says the mother of accused in gang rape and murder of Hyderabad Vet

Read more

Finland Prime minster suggests 6 hours working per day and 4 days per week

Read more

Shocking Incident in Hyderabad : Veterinarian was raped and burnt alive while she was returning to home

Read more

Happy Birthday Raashi Khanna : 7 facts about this pretty actress

Read more

Top 10 Worst Movies of 2019

Read more

Filmfare Awards South 2019 – List of Winners

Read more

Happy birthday Rana : 7 facts about this pan Indian actor

Read more

Top 10 Underrated Films of 2019

Read more

சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலையில் திடீர் திருப்பம் : தற்கொலைக்கு உதவி பேராசியர்களே காரணம் என மாணவி கைப்பேசியில் பதிவு

Read more

1 year of 2.0 : 7 facts about this sci-fi film

Read more