மாணவர்களுக்கு சொந்த செலவில் புத்தாடை, பட்டாசு பரிசளித்த தலைமை ஆசிரியர் – மாணவர்கள் நெகிழ்ச்சி


கடந்த சில மாதங்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியகரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் பகவான் பணியிட மாறுதல் பெற்று சென்ற போது அவரை பள்ளியை விட்டு செல்ல வேண்டாம் எனக் கூறி மாணவர்கள் கட்டி பிடித்து அழுதனர். ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உள்ள உன்னதமான உறவை உணர்த்தும் விதமாக அமைந்த இந்த சம்பவம் பலரையும் நெகிழ வைத்தது.

இதே போல் விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயகுமார் ஞானராஜ் தன் சொந்த செலவில் புத்தாடை, பட்டாசு, ஆகியவற்றை மாணவர்களுக்கு பரிசளித்து அவர்களுடன் தீபாவளி கொண்டாடியது அனைவரையும் நெகிழ வைத்தது. தலைமை ஆசிரியர் ஜெயகுமாரின் பரிசுகளை வட்டார கல்வி அலுலவர்கள் மாணவர்களுக்கு வழங்கி பாதுகாப்பான தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.

மேலும், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் அவரின் மாணவர்களுக்கு கராத்தே, யோகா, சிலம்பாட்டம் ஆகியவற்றை இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார். தலைமை ஆசிரியரின் இத்தகைய செயல்கள் அங்குள்ள மாணவர்களின் பெற்றோரையும் மற்ற ஆசிரியர்களையும் நெகிழ வைத்துள்ளது.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS