நள்ளிரவு வரை நீடித்த இழுபறி – சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றார் திருமாவளவன்


சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் 3219 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். கடந்த 2009 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திருமாவளவன் அதே சிதம்பரம் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2014-ம் ஆண்டு தோல்வியை தழுவியவர் மீண்டும் இம்முறை சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறை திமுகவின் கூட்டணி வேட்பாளராக களம் இறங்கினாலும் சுயேச்சை சின்னத்தில் திருமாவளவன் தேர்தலைச் சந்தித்தார். சிதம்பரம் தொகுதியில் தொடர்ந்து போட்டியிடுவதால் சிதம்பரம் தொகுதி மக்களுக்கு நல்ல பரிச்சயமான வேட்பாளராக திருமாவளவன் இருந்து வந்தார். இது அவருக்கு பெரிய பலமாகவும் அமைந்தது.

சிதம்பரம் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் மட்டுமே இதுவரை வெற்றி பெற்றுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நிலையே நேற்று தொடர்ந்து நீடித்து வந்தது. திருமாவளவன் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெறுவதும் பின்னடைவை சந்திப்பதும் நள்ளிரவு வரை நீடித்து வந்தது.

19-வது சுற்றில் திருமாவளவன் முன்னிலை பெற்ற நிலையில் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் திடீரென வெளியிடப்படவே இல்லை. இதனால் முடிவுகளை அறிவிப்பதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் நள்ளிரவுக்கு மேல் திருமாவளவன் 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


Like it? Share with your friends!

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
0
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format