மொரட்டு சிங்கிள் ஸ்பெஷல் #1 : தமிழ் சினிமாவின் டாப் 5 ‘மொரட்டு சிங்கிள்’ கதாபாத்திரங்கள்


காதலர் தினத்தை நாம் நெருங்கி கொண்டிருக்கிறோம். காதலர்கள் ஒவ்வொருவரும் காதலர் தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருக்கும் நிலையில் காதல் தொடர்பாக பல கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இந்த கட்டுரை சிங்கிள்களுக்கான ஸ்பெஷல் கட்டுரை. தமிழ் சினிமாவில் எத்தனையோ கதாபாத்திரங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் காதலிக்காமல் திருமணமும் செய்து கொள்ளாமல் கடைசி வரை மொரட்டு சிங்கிளாக இருக்கும் கதாபாத்திரங்களும் தமிழ் சினிமாவில் உண்டு. அப்படி தமிழ் சினிமாவின் டாப் 5 ‘மொரட்டு சிங்கிள் கதாபாத்திரங்கள் இதோ:

‘நான் கடவுள்’ ஆர்யா: பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்த திரைப்படம் ‘நான் கடவுள்’. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ‘பூஜா’ இருந்தாலும் ஆர்யா கடைசி வரை மொரட்டு சிங்கிளாகவே இருப்பார். ஒரு அகோரியாக எந்த பெண் மீதும் காதல் கொள்ளாமல் சாமியார் போல் இவர் நடித்திருப்பார். நம்ம ஊர்ல பல சாமியார்கள் சிங்கிள்-னு சொல்லிக்கிறாங்க…

‘நான் கடவுள்’ ஆர்யா

‘ஃப்ரெண்ட்ஸ்’ ரமேஷ் கண்ணா: ‘ஃப்ரெண்ட்ஸ்’ திரைப்படத்தில் விஜய், சூர்யாவுக்கு இணையான கதாபாத்திரத்தில் ரமேஷ் கண்ணா நடித்திருப்பார். விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா ஆகிய மூவரும் இணை பிரியா நண்பர்கள். விஜய், சூர்யா ஆகிய இருவரும் காதலில் விழுந்தாலும் கடைசி வரை யாரையும் காதலிக்காமல் மொரட்டு சிங்கிளாகவே ரமேஷ் கண்ணா இருப்பார். சூர்யா எந்த பெண்ணயுமே பாக்காத மாதிரி நடிச்சு கடைசியில விஜய் தங்கச்சிய காதலிப்பார். நம்ம ஃபிரெண்ட்ஸ்ல சிங்கிள்-னு சொல்லிட்டு பல பேரு இப்படி தான் இருக்காங்க…

‘ஃப்ரெண்ட்ஸ்’ ரமேஷ் கண்ணா

‘கத்தி’ விஜய்: ‘கத்தி’ திரைப்படத்தில் ஜீவா, கதிரேசன் என்ற இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருப்பார். இதில் கதிரேசன் கதாபாத்திரம் சமந்தாவை காதலிக்க ஜீவா கடைசி வரை மொரட்டு சிங்களாக இருப்பார். தன் கிராமத்தை கார்ப்ரேட்களிடம் இருந்து காபாற்றுவதற்கும் விவசாயத்தை அழியாமல் காப்பாற்றுவதற்காகவும் போராடும் பொறுப்பான சிங்கிள் இளைஞராக ஜீவா கதாபாத்திரம் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். ‘சிங்கிள்’ பசங்க எப்போவுமே பொறுப்பான பசங்க தானே…

‘கத்தி’ விஜய்

‘பாகுபலி’ கட்டப்பா: கட்டப்பா கதாபாத்திரத்திற்கு தனியாக விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை. மகிழ்மதி நாட்டிற்காகவே வாழும் கதாபாத்திரத்தில் கட்டப்பா. தேவசேனா மீது பாகுபலி கொள்ளும் காதலுக்காக உதவி செய்யும் கட்டப்பா கடைசி வரை மொரட்டு சிங்கிளாகவே இருப்பார். காதலிக்கிறது நீங்களா இருக்கலாம், ஆனா சிங்கள் தான் உதவி பண்றவங்களா இருப்பாங்க…

‘பாகுபலி’ கட்டப்பா:

‘செக்க சிவந்த வானம்’ விஜய் சேதுபதி: மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிலம்பரசன், விஜய் சேதுபதி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கடைசி வரை சிங்கிளாகவே இருப்பதோடு சூழ்ச்சி செய்து அனைவரையும் வீழ்த்துவார். சிங்கிள் தான் கெத்துனு மனுஷன் சொல்லாம சொல்லிருப்பார்…

‘செக்க சிவந்த வானம்’ விஜய் சேதுபதி

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: Awesome Spotlight

DON'T MISS