தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை முடித்து வைத்தது மனித உரிமைகள் ஆணையம்


0

தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக கூறி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கினை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 12-ம் தேதி தொடங்கியது. 99 நாட்களாக அமைதியான முறையில் நடைபெற்ற இந்த போராட்டம் கடந்த வருடம் மே 22-ம் தேதி 100-வது நாளை எட்டியது. தூத்துக்குடி ஆடசியர் அலுவலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால் தடுப்பு சுவரையும் மீறி போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்ற போது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து மனித உரிமைகள் ஆணையம் துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்தியது. காயப்பட்டவர்களையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விஷயத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக கூறி தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கை முடித்து வைத்தது. மேலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் விசாரணை நடத்துவதற்கு ஒரு நபர் கமிஷன் அமைத்தது போன்றவை திருப்தியளிப்பதாக மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று இது சம்பந்தமான வழக்கை மனித உரிமைகள் ஆணையம் இவ்வாறு முடித்து வைத்துள்ளது.


Like it? Share with your friends!

0

What's Your Reaction?

Angry Angry
2
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
0
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format