பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நாள், நடவடிக்கையால் யாருக்கு பலன்


கடந்த 2016-ம் ஆண்டில் இதே நாளில் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவித்தார்.

இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் நிச்சயம் ஒழிக்கப்படும் என்றும் கள்ளநோட்டு புழக்கமும் தடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார். மேலும் இதனால் இந்திய பொருளாதாரம் உயர்த்தப்படும் என்றும் நாட்டின் எதிர்காலம் கருதி மக்கள் சிரமங்களை 50 நாட்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இந்த திட்டத்தால் சுமார் 3 மாதங்களுக்கு மேல் பொது மக்கள் பணமின்றி தவித்தனர். அதுமட்டுமின்றி ஏ.டி.எம். வாசலில் மணிக்கணக்கில் பலர் காத்திருந்தனர், இதனால் உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.

 

ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவலின் படி பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இதுவரை வங்கிகளுக்கு ரூ.15.31 லட்சம் கோடி பணம் வந்துள்ளதாகவும் ரூ.10,720 கோடி பணம் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தால் நடுத்தர மக்களும் சிறுதொழில் செய்த வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

இத்திட்டத்தை பற்றி இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநிலச் செயலர் சி.பி. கிருஷ்ணன் இந்த திட்டம் படுதோல்வி அடைந்திருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இந்த திட்டத்தால் பேடிஎம் போன்ற வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்கள் தான் பலனை பெற்றது என்று விமர்சித்துள்ளார்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: News

DON'T MISS