உயர் சாதியினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியைச் சேர்ந்த வகுப்பினருக்கு (பொதுப்பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான சட்டத்திருத்த மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கல்வி மற்றும் வேலைவாய்பில் 50 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என்ற நிலையில் தற்போது அதைக்காட்டிலும் அதிகரிக்கும் என்பதால் சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை உயர்சாதி வகுப்பினருக்கு எந்த இட ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படாத நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கவர மத்திய அரசு இந்த இட ஒதுக்கீட்டை அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு “இதுவரை உயர்சாதி வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. தற்போது 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளோர் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்போர் இந்த இட ஒதுக்கீட்டைப பெற முடியும். இந்த இட ஒதுக்கீட்டைக் கொண்டு வர அரசமைப்புச் சட்டம் 15 மற்றும் 16 பிரிவில் சட்டத்திருத்தம் கொண்டுவருவது அவசியமாகும்” என தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகளில் பாஜகவின் செல்வாக்கு குறைந்துள்ளதால் பொதுப்பிரிவினரிடம் வாக்குகளை தக்கவைத்து கொள்ள இந்த இட ஒதுக்கீட்டைக் அரசு கொண்டு வந்துள்ளதாக விமர்சனமும் எழுந்து வருகிறது.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS