தேர்தலில் போட்டியிடும் கட்சிகளை அச்சுறுத்தும் ‘நோட்டா’ – நோட்டாவுக்கு வாக்களிப்பதால் அரசியல் மாற்றங்கள் நிகழுமா?


1
217 shares, 1 point

ஒரு தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளருக்கும் நாம் வாக்களிக்க விரும்பாத பட்சத்தில் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம். NOTA – None Of The Above, இந்த நோட்டா வாக்குப்பதிவு எந்திரத்தின் கடைசி பொத்தானாகப் பொருத்தப்பட்டிருக்கும்.

2013-ம் ஆண்டிற்கு முன் நடத்தப்பட்ட எந்த தேர்தலிலும் நோட்டா என்ற ஒரு பொத்தான் இல்லை. நாம் நம் தொகுதியில் நிற்கும் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத பட்சத்தில் ’49ஓ’ என்ற சட்டப்பிரிவின் படி தேர்தல் அதிகாரியிடம் கூறி அதற்கான பதிவேட்டில் குறிப்பிடும் முறை இருந்தது. ஆனால் இதில் வாக்காளரின் விவரங்கள் தெரியவரும் என்பதால் வாக்காளரின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்டது தான் ‘நோட்டா’. 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா இடம்பெற்றது. நோட்டா முதல்முறையாக 2013-ம் ஆண்டு 5 மாநிலங்களுக்கு நடத்தப்பட்ட சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்டது. அப்போது 15 லட்சம் பேர் இதை பயன்படுத்திய நிலையில் மொத்த வாக்காளர்களில் நோட்டாவின் எண்ணிக்கை 1.5 சதவிகிதமாக இருந்தது.

பின் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் 60 லட்சம் பேர் இந்த வாய்ப்பை பயன்படுத்தினர். 2017ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில், சிபிஎம், சிபிஐ, எஸ்ஏடி (அம்ரிஸ்டர்), இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் ஆப்னா பஞ்சாப் கட்சி ஆகிய ஐந்து பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை நோட்டா பெற்றிருந்தது.

தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கட்சியை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றுள்ளது. தமிழகத்தில் கடந்த 2017-ல் நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது. இதனால் சமூக வலைதளங்களில் பா.ஜ.க. கேலிக்குள்ளானது.

மேலும் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள 13 தொகுதிகளில் நோட்டாவுக்கு அதிகளவில் வாக்குகள் விழுந்தது. இதே தேர்தலில் குவாலியர் தெற்கு தொகுதியில் 121 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. தோற்றதுடன் பா.ஜ.க. வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றது. மேலும் ஸ்வஸாரா, ஜோரா, ஜபல்பூர் வடக்கு, பினா, கோலராஸ், ராஜ்நகர், தாமோ, பியாரோ, ராஜ்பூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற வாக்குகளை விட நோட்டா அதிகளவில் வாக்குகளைப் பெற்றுள்ளது.

நோட்டாவின் மூலம் மக்கள் ஆளும் அரசின் மீதும் அரசியல் கட்சிகள் மீதும் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்தினாலும் நோட்டாவால் தேர்தல் முடிவில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஒரு குறிப்பிட்ட தொகுதியில், நோட்டாவுக்கு அதிகமான ஓட்டு பதிவானாலும், அதற்கடுத்த இடத்தில் உள்ளவரே, வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இருப்பினும், தேர்தல் சீர்திருத்தம் மேற்கொள்ளவும், கட்சிகள் தங்களுடைய வேட்பாளர் தேர்வில் கவனமாக இருக்கவும், மக்களுக்கு தங்கள் கட்சியின் மேல் உள்ள அதிருப்தியை அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ளவும் இது உதவும்.


Like it? Share with your friends!

1
217 shares, 1 point

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
2
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format